உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது: பல்வேறு நாடுகளை சேர்ந்த 15 லட்சம் பேர் வைரசால் பாதிப்பு

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது: பல்வேறு நாடுகளை சேர்ந்த 15 லட்சம் பேர் வைரசால் பாதிப்பு

பெய்ஜிங்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 91,595 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 15,39,118 பேர் பாதிக்கப்பட்டு 3,40,586 பேர் குணமடைந்தனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 91,595 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 15,39,118 பேர் பாதிக்கப்பட்டு 3,40,586 பேர் குணமடைந்தனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,32,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பியாவில் மட்டும் 7,72,592 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 90,011 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலியைத் தொடர்ந்து பிரான்சிலும் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியபோதும் குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாகவே 135-ஐ தாண்டவில்லை.கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் சில வருமாறு:-* அமெரிக்கா - 14,977* ஸ்பெயின் - 15,238* இத்தாலி - 17,669* பிரான்ஸ் - 10,869* ஜெர்மனி - 2,349* சீனா - 3,335* ஈரான் - 3,993* இங்கிலாந்து - 7,097* பெல்ஜியம் - 2,523* நெதர்லாந்து - 2,396* துருக்கி - 895* பிரேசில் - 823* ஸ்விடன் - 763

மூலக்கதை