மீண்டும் பரவுகிறது சீனாவில் புதிதாக 63 பேருக்கு பாதிப்பு

தினகரன்  தினகரன்
மீண்டும் பரவுகிறது சீனாவில் புதிதாக 63 பேருக்கு பாதிப்பு

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் முதல் முதலாக உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவி விட்டது. இதில், பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், சீனாவில் கடந்த 2 நாட்களாக இந்த வைரசால் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால், நேற்று இந்த நிலைமை மாறியது. சீனாவின் பல்ேவறு பகுதிகளில் 63 பேருக்கு புதிதாக நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது.  இது பற்றி சீனா தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனா பல்வேறு பகுதிகளில் நேற்று மட்டும் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 61 பேர் வெளிநாட்டினர். இதனால், சீனாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் எண்ணிக்கை 1,104 ஆக அதிகரித்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. அதேபோல், சீனாவின் சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ``கொரோனா பாதிப்பினால் நேற்று (நேற்று முன்தினம்) இரண்டு பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த பலியானோர் எண்ணிக்கை 3,335 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது,’’ என்றனர்.

மூலக்கதை