கர்நாடகாவில் எம்எல்ஏ.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் ‘கட்’

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் எம்எல்ஏ.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் ‘கட்’

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 197 ஆக  உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.கர்நாடகா மாநிலத்தில் கொரோனா  வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று  முன்தினம் வரை நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 181 ஆக இருந்த நிலையில் நேற்று  ஒரே நாளில் 16 பேருக்கு பாசிடிவ் வந்துள்ளது. அதன் மூலம் தொற்று  பாதித்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. கதக் மாவட்டத்தில் 80 வயது மூதாட்டி  ஒருவர் உயிரிழந்துள்ளதன் மூலம் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்,  முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது.  இதில் மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்று பரவல் குறித்து  ஆலோசிக்கப்பட்டது.   தற்ேபாது நிலவும் சூழ்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது  மட்டுமே தீர்வாக இருக்கும் என்று அமைச்சர்கள் ஆலோசனை வழங்கினர். முதல்வர்,  அமைச்சர்கள், பேரவை மற்றும் ேமலவை உறுப்பினர்களின் ஊதியத்தில் 30 சதவீதம்  பிடித்தம் செய்து  அதன் மூலம் கிடைக்கும் ரூ.15.36 கோடி நிதியை கொரோனா  நிவாரண பணிக்கு பயன்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக  விரைவில் அரசாணை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டது.

மூலக்கதை