கொரோனாவை விட மோசம் இனபாகுபாடு: ஜூவாலா கட்டா குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
கொரோனாவை விட மோசம் இனபாகுபாடு: ஜூவாலா கட்டா குற்றச்சாட்டு

ஐதராபாத்: ‘கொரோனாவை விட  மோசமானது இனபாகுபாடு’ என்று பிரபல பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து புறப்பட்டு உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கி கிடக்கிறது. ஆனால் ஊரடங்கை கண்டுக் கொள்ளாமல், இனபாகுபாடு மட்டும் அடங்காமல் ஊர் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. கொரானாவை வைத்து தன்னிடமும் இனபாகுபாடு காட்டப்படுவதாக  பிரபல பேட்மின்டன் வீராங்கனை ஜூவலா கட்டா தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் ஜூவாலா கட்டா கூறியிருப்பதாவது: சீனாவில்  கொரோனா வைரஸ் உருவானதால் சீனாவுக்கு எதிராக உருவான மனநிலை, இப்ேபாது வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. அவர்கள் தோற்றம் காரணமாக சொந்த நாட்டு மக்களையே சிலர் புறக்கணிக்கின்றனர். அதிலும் வடகிழக்கு மாநில சிறுமியின் மீது சிலர் எச்சில் துப்பியதை பார்த்தேன். அது என்னை பாதித்தது. அந்த உணர்வுகளை சமூக ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தினேன். என் புரிதல்கள் சில நேரங்களில் தவறாக இருக்கலாம். ஆனால் இதுப்போன்ற பிரச்னைகளை பேசுவது என் கடமை.  அதன் பிறகு என்னை சமூக ஊடகங்களில்  சிலர் ‘அரை கொரோனா’ என்று என்னை அழைக்கிறார்கள். அவர்களுக்கு என் முகத்திற்கு நேராக சொல்ல தைரியமில்லை. அதனால்தான் சமூக ஊடகங்களின் வழியாக இப்படி விமர்சனம் செய்கிறார்கள். இனபாகுபாடு தெரியாத ஒரு தலைமுறையில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் இனபாகுபாட்டை எந்த விதத்திலும் வெளிப்படுத்தியதில்லை. அதனால் ஆரம்பத்தில் பலர் என்னை ‘சிங்கி’ என்று அழைத்த போது, என் அம்மா சீனக்காரர் என்பதால் அப்படி அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால்  வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்ற ேபாதுதான், அந்த வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டேன். இனபாகுபாடு அடிப்படையில் வடகிழக்கு மாநில மக்களைதான் இப்படி அழைக்கிறார்கள் என்பதை புரிந்துக் ெகாண்டேன். அவர்களின் தோற்றத்தை வைத்து அவர்களை இந்தியர்களாக கருதவில்ைல என்பதையும் புரிந்துக் கொண்ேடன். மக்களிடம் இரக்கத்தன்மை இல்லாததால் இப்படி நடந்துக் கொள்கின்றனர். ஆனால் சகித்துக் கொள்ள வேண்டியதில்லை. அதனால் இதுப்போன்ற இனபாகுபாடுகளை நிறுத்த வேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் இனவெறி தூண்டும் கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது  மீது சைபர் கிரைம் போலீசார் கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜூவாலா கூறியுள்ளார்.காந்தி கல்யாணம்:ஜூவாலாவின்  தந்தை கிராந்தி  கட்டாவின் பூர்வீகம் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம். அவருடைய குடும்பம் பொதுவுடமை, காந்திய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் உள்ள சேவாகிராம் காந்தி ஆசிரமத்தின் தொடர்பில் இருந்தனர். சீனாவை சேர்ந்தவர் காந்தியவாதி செங். அவர் 1977ம் ஆண்டு சேவாகிராம் ஆசிரமத்திற்கு வந்தார். கூடவே மொழி பெயர்த்துச் செல்ல வசதியாக தனது பேத்தியான யேலனை அழைத்து வந்தார்.  அங்குதான் முதன்முதலில் சந்தித்த கிராந்தி-யேலன்,  பின்னர் காதலித்து திருமணம் புரிந்தனர். ஜூவலாவும் வர்தாவில் தான் பிறந்தார். பின்னர் ஐதராபாத்தில் குடியேறினர்.குவிந்த பதக்கங்கள்:சர்வதேச போட்டிகளில் ஜூவாலா(36) பெரும்பாலும் இரட்டையர் பிரிவுகளில்தான் விளையாடி உள்ளார். உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் தலா ஒரு தங்கம், காமன் வெல்த் போட்டிகளில் ஒரு வெண்கலம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.  தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 5 தங்கங்களை அள்ளியுள்ளார். கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மேலும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 2 பிரிவுகளுக்கு தகுதிப் பெற்ற முதல், ஒரே இந்தியர் என்ற சாதனையை ஜூவாலா படைத்தார்.

மூலக்கதை