செய்தி, கட்டுரைகளை பயன்படுத்த பத்திரிகைகளுக்கு கூகுள் கட்டணம் தர வேண்டும்: பிரான்ஸ் அமைப்பு உத்தரவு

தினகரன்  தினகரன்
செய்தி, கட்டுரைகளை பயன்படுத்த பத்திரிகைகளுக்கு கூகுள் கட்டணம் தர வேண்டும்: பிரான்ஸ் அமைப்பு உத்தரவு

பாரீஸ்: ‘பத்திரிகைகள், செய்தி நிறுவனங்களின் சிறப்பு செய்திகள், கட்டுரைகளை வெளியிட, கூகுள் நிறுவனம் கட்டணம் செலுத்த வேண்டும்,’ என பிரான்ஸ் ஒழுங்கு முறை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிடும் சிறப்பு செய்திகள், கட்டுரைகள் போன்றவற்றை கூகுள் இணையதளம் பயன்படுத்தி வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிகை, செய்தி நிறுவனங்களுக்கு அது கட்டணம் செலுத்த வேண்டும் என்ற போராட்டம், ஐரோப்பாவில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஊடகங்களின் பதிப்புகளை கூகுளில் வெளியிட,   சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கூகுள் கட்டணம் செலுத்த வேண்டும்,’ என்று பிரான்ஸ் ஒழுங்கு முறை அமைப்பு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக அந்த அமைப்பு பிறப்பித்துள்ள உத்தரவில், `வெளியீட்டாளர்கள், செய்தி நிறுவனங்களின் பதிப்புகளை மீண்டும் பயன்படுத்த கட்டணம் செலுத்aதுவது தொடர்பாக, நல்லெண்ண அடிப்படையில், சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களுடன் அடுத்த 3 மாதங்களுக்குள் கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை