கொரோனாவில் இருந்து 13 லட்சம் ரயில்ேவ ஊழியர்களை பாதுகாக்க புது திட்டம்: வாரியம் வகுத்தது

தினகரன்  தினகரன்
கொரோனாவில் இருந்து 13 லட்சம் ரயில்ேவ ஊழியர்களை பாதுகாக்க புது திட்டம்: வாரியம் வகுத்தது

புதுடெல்லி: ரயில்வேயின் 17 மண்டலங்களிலும் மொத்தம் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களையும், இவர்களின் குடும்பத்தினரையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தனி நெறிமுறைகளையும் அது வகுத்துள்ளது.     அதன் விவரம்:*   ரயில்வே தலைமையிடம், பணிமனை, சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட உள்ளது. இதில் பெயர், வீட்டு முகவரி, போன் எண், தற்போது இருக்கும் இடம், குடும்ப உறுப்பினர்கள் விவரம் இடம் பெறும்.  * ரயில்வே ஊழியர்கள், குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை எங்கு தனிமைப்படுத்த வேண்டும் என்ற விவரங்களும் அதில் இடம் பெறும். * ஊழியர்கள் பற்றிய முழு விவரத்தையும் ரயில்வே உயரதிகாரிகள் தொகுத்து வைத்திருக்க வேண்டும்.* கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.* ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் நலம் பற்றி, விடுமுறை அளிக்கும் அதிகாரிகள், அவர்கள் கீழ் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் தினமும் விசாரிக்க வேண்டும். * இந்த நெறிமுறைகள் சில மண்டலங்களில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு விட்டன. இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை