கண்டுகொள்ளப்படாத வேளையிலும் எகிறிய தங்க விலை!! : 20 நாட்களில் சவரன் ரூ.3 ஆயிரம் அதிகரித்து ரூ. 34,640க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
கண்டுகொள்ளப்படாத வேளையிலும் எகிறிய தங்க விலை!! : 20 நாட்களில் சவரன் ரூ.3 ஆயிரம் அதிகரித்து ரூ. 34,640க்கு விற்பனை

மும்பை : தங்கம் விலை 20 நாட்களில் சவரனுக்கு ரூ.3 ஆயிரம் அதிகரித்து விற்பனையாகி வருகிறது.உலகம் முழுவதும் கொரோனா தொற்று பொருளாதாரத்தை முடக்கியுள்ளது. ஊரடங்கால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சூழலில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல் ஆகும். தமிழகத்தில் கடந்த 24ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தான் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன் பிறகு தான் , மத்திய அரசு மறுநாளில் இருந்து ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. ஆனால் சென்னையை பொறுத்தவரையும்,மும்பை, டெல்லி, போன்ற பல்வேறு முக்கிய நகரங்களிலும் 4 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது மார்ச் 20ம் தேதியே கொரோனா அச்சம் காரணமாக தங்க நகைக்கடைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நிலையில், தங்கத்தின் விலையை நாம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒரு வேளை ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்து நகைக் கடைகள் திறக்கப்பட்டால் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்று விசாரித்த போது, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய நிலவரத்தின் படி,ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,330 ஆக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 34,640 ரூபாயாக இருக்கிறது. கடந்த 20ம் தேதி ஒரு சவரன் ரூ.31,611 ஆக இருந்தது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை 3000 ரூபாய்  அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை