கொரோனாவுக்கு மருந்தாக கரடியின் பித்த நீரால் தயாரிக்கப்பட்ட ஊசியை செலுத்த சீனா பரிந்துரை

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்கு மருந்தாக கரடியின் பித்த நீரால் தயாரிக்கப்பட்ட ஊசியை செலுத்த சீனா பரிந்துரை

பெய்ஜிங் : சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரடியின் பித்த நீரால் தயாரிக்கப்பட்ட ஊசியை செலுத்தலாம் என்று அந்த நாடு அறிவுறுத்தியுள்ளது.இந்த தகவலை நேஷனல் ஜியாகிரபிக் வெளியிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இந்த ஊசியை பயன்படுத்த உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஓர் உயிருள்ள கரடியிலிருந்து எடுக்கப்படும் பித்த நீர் காலம்காலமாக சீனாவின் பாரம்பரிய மருந்தில் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 18ம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு நோய்களை குணமாக்க கரடியின் பித்த நீரை அந்த நாட்டில் மருந்தாக உட்கொண்டு வருகின்றனர்.பித்த நீரில் அதிகளவில் இருக்கும் ursodeoxycholic கல்லீரல் நோய் மற்றும் பித்தப்பைக் கற்களுக்கு நிவாரணியாக இருக்கும் என்று சீன மக்கள் நம்புகின்றனர்.கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கரடியின் பித்த நீரை ஊசி மருந்தாக தயாரித்து நோய் நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஊசியை கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்துமாறு சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.கொரோனா தொற்றுக்குப் பின்னர் சீனா இதுபோன்று பரிந்துரை செய்து இருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களை கவலை அடையச் செய்துள்ளது.ஒரு பக்கம் விலங்குகளை சாப்பிடுவதால் நோய் தொற்று பரவிக் கொண்டு இருக்கும்போது, கரடியின் பித்த நீரை பரிந்துரைத்து இருப்பது உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மூலக்கதை