கொரோனாவிடம் தப்பித்தது எப்படி..? ஹாரிபாட்டர் கதாசிரியர் விளக்கம்

FILMI STREET  FILMI STREET
கொரோனாவிடம் தப்பித்தது எப்படி..? ஹாரிபாட்டர் கதாசிரியர் விளக்கம்

உலகில் பல புத்தகங்கள் இருந்தாலும் நிறைய பேரால் வாசிக்கப்பட்ட கவரப்பட்ட புத்தகம் என்ற பெருமை ‘ஹாரிபாட்டர்’ புத்தகத்திற்கு உண்டு.

இப்புத்தகம் விற்பனை பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்த புத்தகத்தை எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங் என்பவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அதன்பின்னர் அதிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜேகே ரவ்லிங் கூறும்போது, “எனக்கும் கொரோனா தொற்று குறித்த அறிகுறிகள் தென்பட்டன.

அப்போது குயீன்ஸ் மருத்துவமனை டாக்டர் ஒருவர் அதிலிருந்து எப்படி மீளலாம் என சில டிப்ஸ்களை கொடுத்திருந்தார்..

என் கணவரின் ஆலோசனைப்படி வீட்டிலிருந்தபடியே அவற்றை மேற்கொண்டேன். இப்போது நான் பூரண குணமாகிவிட்டேன்.

அந்த டிப்ஸை உங்களுக்கும் தருகிறேன்.. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள்” என கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டாக்டர் குறித்த வீடியோவையும் இணைத்துள்ளார் ஜே.கே.ரவ்லிங்.

Please watch this doc from Queens Hospital explain how to relieve respiratory symptoms. For last 2 weeks I’ve had all symptoms of C19 (tho haven’t been tested) & did this on doc husband’s advice. I’m fully recovered & technique helped a lot.https://t.co/xo8AansUvc via @YouTube

— J.K. Rowling (@jk_rowling) April 6, 2020

மூலக்கதை