தல தளபதி பற்றி சைக்கோ நடிகை அதிதி ராவ் பேச்சு

FILMI STREET  FILMI STREET
தல தளபதி பற்றி சைக்கோ நடிகை அதிதி ராவ் பேச்சு

மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ்.

சமீபத்தில் வெளியான மிஷ்கினின் ‘சைக்கோ’ படத்திலும் நடித்திருந்தார்.

தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அதிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது நெட்டிசன் தளபதி விஜய்யுடன் எப்பொழுது நடிக்கப்போகிறீர்கள் என கேட்க, அதற்கு அவர் ‘தளபதி விஜய்யிடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.

பின்னர் தல அஜித் குறித்து சொல்லுங்கள் என்று மற்றொரு ரசிகர் கேட்க, நிரந்தரமான கிளாஸ் ஆனவர் அஜித் என பதிலளித்தார்.

மூலக்கதை