அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் - மா.கா.பா.ஆனந்த்

தினமலர்  தினமலர்
அவசரம் இல்லை, மெதுவாக வரலாம்  மா.கா.பா.ஆனந்த்

சின்னத்திரையில் பிரபலமான மா.கா.பா.ஆனந்த், சினிமாவிலும் ஹீரோவாக நடிக்கிறார். மாணிக் படத்தை அடுத்து, ஹரிஷ் கல்யாண் உடன் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார். இப்போது வரை விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் யாரும் வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழலால் டிவி நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. இதனால் வீட்டிலேயே முடங்கி உள்ள இவர், சமீபத்தில் வித்தியாசமான ஸ்டைலில் முடிதிருத்தம், முகசவரம் செய்து, அந்த போட்டோவை சமூக வலைதளங்கில் வெளியிட்டு இருந்தார். இதை பலரும் வரவேற்றனர்.

இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது, வீட்டில் சும்மா இருக்கிறேன், முகச்சவரம் செய்து ஸ்டில் போஸ்ட் செய்தேன். அதற்கு இப்படி வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. டிவி யில் இருந்து வர்றவங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் வருதே, ஏன் உங்களுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லையா என்று கேட்டால், இப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அதனால் நண்பர்கள் படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஹரிஷ் படத்தை அடுத்து மகத் படத்தில் நடித்து முடித்துள்ளேன். விரைவில் புதுப்படம் ஒன்றில் நடிக்கிறேன். அவசரம் இல்லை, மெதுவாக வரலாம் என்கிறார் மா.கா.பா.

மூலக்கதை