வேலைவாய்ப்பு ரத்தால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்: மத்திய அமைச்சர் தகவல்

தினகரன்  தினகரன்
வேலைவாய்ப்பு ரத்தால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: `‘வேலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு வேலை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்’’ என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில் நாட்டில் உள்ள 23 ஐஐடி இயக்குனர்களுக்கும் கடந்த வாரம் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் `கொரோனா தொற்றால் ஐஐடி வளாகத்தில் நடத்தப்படும் எந்த வேலைவாய்ப்பு முகாம்களும் பாதிக்கப்படகூடாது என்றும் ஐஐடி மாணவர்களுக்கு வளாக தேர்வு மூலம் கிடைக்கப்பெற்ற எந்த வேலையையும் வாபஸ் பெறக்கூடாது என்று வேலையளிக்கும் நிறுவன உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று  அமைச்சர் பொக்ரியால் அளித்த பேட்டியில் `ேவலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவதை ஐஐடி இயக்குனர்கள் உறுதி செய்யவேண்டும். கொரோனா பாதிப்பால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் நிறுவன உரிமையாளர்கள் எந்த வேலைவாய்ப்பையும் திரும்ப பெறக்கூடாது’ என்றார்.

மூலக்கதை