என்னை கவுரவப்படுத்த விரும்பினால் ஒரு ஏழை குடும்பத்தை தத்தெடுத்து உதவுங்கள்: சமூக வலைதள குறும்புக்கு மோடி பதிலடி

தினகரன்  தினகரன்
என்னை கவுரவப்படுத்த விரும்பினால் ஒரு ஏழை குடும்பத்தை தத்தெடுத்து உதவுங்கள்: சமூக வலைதள குறும்புக்கு மோடி பதிலடி

புதுடெல்லி: ‘பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடம் எழுந்து நில்லுங்கள்’ என்ற வைரல் டிவிட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மோடி, இது தன்னை சர்ச்சையில் சிக்க வைப்பதற்கான முயற்சியாக தோன்றுவதாக கூறியுள்ளார். ‘பிரதமர் மோடியை கவுரவிக்க, வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள்,’ என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: என்னை கவுரவப்படுத்த அனைவரும் 5 நிமிடம் எழுந்து நிற்குமாறு சிலர் பிரசாரம் செய்து வருவதாக ஒரு தகவல் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது என்னை சர்ச்சையில் மாட்டி விடுவதற்கான குறும்புத்தனமான முயற்சியாக கருதுகிறேன். ஒருவேளை யாராவது நிஜமாகவே என் மீதுள்ள அன்பால், கவுரப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்திருந்தால், ஒரு ஏழைக் குடும்பத்தை தத்தெடுங்கள். குறைந்தபட்சம் கொரோனா நெருக்கடி தீரும் வரையாவது அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுங்கள். இதை விட வேறு எதுவும் எனக்கு பெரிய கவுரவம் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆரோக்கிய சேது ஆப்: மேலும், பிரதமர் மோடி ‘ஆரோக்கிய சேது’ மொபைல் ஆப்-ஐ மக்கள் அனைவரும் தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். அதற்கான லிங்க்.யையும் அவர் தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த ஆப், கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் அருகில் சென்றால் நமக்கு எச்சரிக்கை செய்யும். மேலும், கொரோனா குறித்து நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் வசதிகளும் இந்த ஆப்பில் உள்ளன. இந்த ஆப்பை மத்திய அரசு கடந்த 2ம் தேதி வெளியிட்டது.இந்தியா, சீனா, பாக். இடையிலான ராணுவ தளபதிகள் மாநாடு ஒத்திவைப்பு:இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா எல்லையில் நிலவும் பாதுகாப்பு சவால்கள் தொடர்பாக, இந்நாட்டு ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை செய்வதற்காக 6 நாள் மாநாடு நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது. வரும் 13ம்a ேததி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற இருந்த இந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இது பற்றி ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘`கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதை ஒழிக்கும் பணியில் அரசுடன் இணைந்து ராணுவமும் களம் இறங்கியுள்ளது. இதனால் மாநாடு தள்ளிவைக்கப்படுகிறது,’’ என்றனர்.டாக்டர்களின் கவச உடையை சுத்தப்படுத்தி பயன்படுத்தலாம் எய்ம்ஸ் வழிகாட்டி நெறிமுறை:மருத்துவர்கள், நர்சுகள் பயன்படுத்தும் வைரஸ் தாக்காத முழு கவச உடை, முகக் கவசம், கையுறை, கண்ணாடி, ஷூ உள்ளிட்ட, ‘தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள்’ (பிபிஇ) பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், அதனை மறுசுழற்சி செய்வது பற்றிய வழிகாட்டி நெறிமுறைகளை எய்ம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், `பிபிஇ.யை தூய்மைப்படுத்தி மீண்டும்  பயன்படுத்தலாம் என்பது உகந்தது அல்ல. ஆனால், வேறு வழியில்லை என்ற கடைசி கட்டத்தில் இதை செய்வதை தவிர வேறு வழியில்லை. எனவே, முழு கவச உடை, என்-95 முகக் கவசம் ஆகியவற்றை முழுவதும் மூடிய அறைக்குள் 11 சதவீத ஹைட்ரஜன் பெராக்சைடு நீராவியினால் தூய்மைப்படுத்திபயன்படுத்தலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை