வன்முறையில் இருந்து பாதுகாக்ககோரி அரசு உதவி எண்ணுக்கு 11 நாளில் 92,000 அழைப்பு: ஊரடங்கு அமலானதில் இப்படியும் ஒரு பரிதாபம்

தினகரன்  தினகரன்
வன்முறையில் இருந்து பாதுகாக்ககோரி அரசு உதவி எண்ணுக்கு 11 நாளில் 92,000 அழைப்பு: ஊரடங்கு அமலானதில் இப்படியும் ஒரு பரிதாபம்

புதுடெல்லி: பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் பெண்கள், குழந்தைகள் நல வாழ்வு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சைல்ட்லைன் இந்தியா துணை இயக்குனர் ஹர்லின் வாலியா கூறியதாவது:  குழந்தைகள் பாதுகாப்பிற்கான அரசின் அவசர உதவி எண் 1098க்கு மார்ச் 20-31 தேதிக்குள் இடைப்பட்ட 11 நாட்களில், 3.07 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் 30 சதவீதம் அதாவது 92,105 அழைப்புகள் துன்புறுத்துதல், வன்முறையில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரியது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர், அரசு அவசர உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இவை தவிர உடல்நிலை குறித்து 11 சதவீத அழைப்புகளும் வந்துள்ளன. அவசர உதவி எண் 1098 அத்தியாவசிய சேவையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். மார்ச் 24 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை வந்த 257 அழைப்புகளில் 69 வீடுகளில் நடக்கும் வன்முறையில் இருந்து பாதுகாப்பு கேட்டு வந்தவையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை