இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையால் பாதிக்கப்படுவர்: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையால் பாதிக்கப்படுவர்: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்

ஜெனிவா: ‘கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  கொரோனா தாக்குதல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், முறைசாரா தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவில் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்தியா, நைஜீரியா, பிரேசில் நாட்டில் முறைசாரா தொழிலாளர்களின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 90 சதவீதம் மக்கள் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். இந்த ஊரடங்கால் இந்தியாவில் 40 கோடி தொழிலாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால், அவர்கள் மீண்டும் கிராமங்களுக்கு திரும்பும் நிலை ஏற்படும். உலக அளவில் முறைசாரா துறைகளில் பணிபுரியும் 200 கோடி மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை