கொரோனா பாதிப்புக்கு காப்பீடு ரிலையன்ஸ் ஜெனரல் அறிமுகம்

தினமலர்  தினமலர்
கொரோனா பாதிப்புக்கு காப்பீடு ரிலையன்ஸ் ஜெனரல் அறிமுகம்

மும்பை:பொது காப்பீட்டு நிறுவனமான, ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ், கொரோனா பாதிப்பிலிருந்து நிதி பாதுகாப்பு பெறுவதற்கான, காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி, கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில், உறுதி செய்யப்பட்ட தொகையில், 100 சதவீதமும் கிடைக்கும். ஒருவேளை, காப்பீடுதாரர் தனிமைப்படுத்தலுக்கு ஆளாகும்பட்சத்தில், அந்த காலக்கட்டத்தில், உறுதித் தொகையில், 50 சதவீதம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில், பாலிசி காலம் ஓராண்டாகும். பாலிசி எடுத்து, காத்திருப்பு காலமான, 15 நாட்களுக்குப் பிறகே இழப்பை கோர முடியும். சிகிச்சைக்கு ஆகும் செலவு எவ்வளவு என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், மொத்த தொகை வழங்கப்படும்.


இதன் மூலம், கொரோனாவால் ஏற்படும் நிதி தாக்கங்களை மக்கள் குறைத்துக் கொள்ள, இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில், மூன்று மாதத்தில் துவங்கி, 60 வயது வரையிலான நபர்கள், 25 ஆயிரம் ரூபாய் முதல், 2 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டை பெறலாம்.மேலும் சம்பளக் குறைப்பு, பணியிழப்பு ஆகியவற்றுக்கும், இத்துடன் சேர்த்து, கூடுதலாக காப்பீடு செய்து கொள்ள முடியும்.

மூலக்கதை