நாளைய நட்சத்திரம்...

தினகரன்  தினகரன்
நாளைய நட்சத்திரம்...

ஊரடங்கினால் வீட்டில் முடங்கி இருந்தாலும் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்ற விளையாட்டு வீரர்களைப் போலவே சமூக ஊடகத்தில்  ‘பிஸி’யாக இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணந்துள்ள சானியா நேற்று தங்கள் மகன்  இஷான், டென்னிஸ் ராக்கெட்டுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கூடவே, ‘அவன் எதைப் பற்றி யோசிக்கிறான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரை பின்தொடரும் ரசிகர்கள், டென்னிசா, கிரிக்கெட்டா? எந்த விளையாட்டை தேர்ந்தெடுப்பது என்று இஷான் குழப்பத்தில் நிற்பதாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மூலக்கதை