இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் பலி: 65 புதிய தனியார் மையங்கள் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி...மத்திய சுகாதாரத்துறை

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் பலி: 65 புதிய தனியார் மையங்கள் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி...மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 773 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 4,798-ல் இருந்து 5,194 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 83 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது; இந்தியாவில் இன்றுவரை 1,21,271 கொரோனா சோதனைகள் செய்துள்ளோம். மகாராஷ்டிராவிலிருந்து இதுவரை அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பிரபலமான ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் செவிலியர் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்களுக்கு நோய்த்தொற்றுகள் வருவது ஒரு பெரிய சவாலாகும். மேலும் மருத்துவமனை அமைப்பில் ஒரு நடத்தை மாற்றத்தை நாங்கள் கவனித்து வருகிறோம். நோய்த்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். நேர்மறை என்று சந்தேகிக்கக்கூடிய கர்ப்பிணிப் பெண்களை கவனித்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண்களின் சந்தேகத்திற்குரிய கொரோனா பாதிப்புகளை சமாளிக்க பயிற்சி தொகுதிகள் தொடங்கப்படும். மருத்துவமனைகளில், தொற்று தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதால் சுகாதார ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லை. மேலும் இந்தியாவில் 65 புதிய தனியார் மையங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை