கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பலி; 354 பேருக்கு பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,421 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பலி; 354 பேருக்கு பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,421 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4421 ஆக அதிகரித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால்  உலகளவில பலி எண்ணிக்கை 74,647 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 1,345,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,78,428 பேர் குணமடைந்தனர். மேலும் 47,517 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பரவ தொடங்கிய சீனாவில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4421 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 114 பேர் உயிரிழந்த நிலையில், 325 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி   செய்யப்பட்டுள்ளது. 45 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 621 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் குணமடைந்துள்ளனர்.மாநில வாரியாக விவரம்:அசாமில் 26 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.பிகாரில் 32 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.சண்டிகரில் 18 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.சட்டிஸ்கரில் 10 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 8 பேர் குணமடைந்தது.கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.குஜராத்தில் 144 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.அரியானாவில் 90 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.டெல்லியில் 523 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 19 பேர் குணமடைந்தது.கேரளாவில் 327 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 58 பேர் குணமடைந்தது.ராஜஸ்தானில் 288 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.ஜார்கண்டில் 4 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.லடாக்கில் 14 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.ஒடிசாவில் 21 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.பாணடிச்சேரி 5 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.ஜம்மு காஷ்மீரில் 109 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.கர்நாடகாவில் 151 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.பாஞ்சாபில் 76 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.தெலுங்கானாவில் 321 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.மேற்கு வங்கத்தில் 91 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 13 பேர் குணமடைந்தது.ஆந்திரப்பிரதேசத்தில் 266 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.மத்தியப்பிரதேசத்தில் 165 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.உத்தரப்பிரதேசத்தில் 305 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.இமாச்சலப்பிரதேசத்தில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 10 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

மூலக்கதை