உலக சுகாதார தினம்; நமக்காக, பிறரின் நலனுக்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிங்க; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
உலக சுகாதார தினம்; நமக்காக, பிறரின் நலனுக்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிங்க; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: உலக நலவாழ்வு நாள் என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல்  இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது. அதன்படி,  கடந்த ஆண்டு அனைவருக்கும் ஆரோக்யம் என்ன கருப்பொருளுடன் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. இது தொடா்பான #HealthForAll என்ற ஹேஷ்டேக்கையும் உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியது. இந்நிலையில், இன்று உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், தமது சொந்த வாழ்க்கையையும் மற்றவர்களின்  வாழ்க்கையையும் பாதுகாக்கும் சமூக விலகல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வோம். ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்துவதற்கும் இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும், இது நமது  ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உறவினர்களுக்கு மட்டுமின்றி கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை