கொரோனா பாதிப்பிலிருந்து வென்று மீண்டும் நாம் சந்திப்போம்: நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து ராணி உரை

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பிலிருந்து வென்று மீண்டும் நாம் சந்திப்போம்: நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து ராணி உரை

லண்டன்: இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது மிகவும் அரிதாக நடக்கும் சம்பவம். இதற்கு முன் கடந்த 1991ம் ஆண்டு வளைகுடா போர் நடந்த போதும், இளவரசி டயனா கடந்த 1997ம் ஆண்டு இறந்த போதும், ராணியின் தாய் கடந்த 2002ம் ஆண்டு இறந்த போதும், அவரது வைரவிழா கடந்த 2012ம் ஆண்டு கொண்டாடியபோதும் பேசினார்.  தற்போது இங்கிலாந்தி கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர், 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லசும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டார். இங்கிலாந்து பிர தமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவுக்கு சிகி ச்சை பெற்று வருகிறார். இங்கிலாந்தில் கொரோனா பரவல் தொடங்கியது, ராணி 2ம் எலிசபெத், அவரது கணவர் இளவரச் பிலிப் ஆகியோர் பக்கிங்காம் அரண்மனையைவிட்டு கடந்த மாதம் வெளியேறி வின்ட்சர் அரண்மனைக்கு குடியேறினர். அங்கு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வீடியோவை பிபிசி குழுவினர் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பதிவு செய்தனர். அவர் 4 நிமிடங்கள் ஆற்றிய உரையில் கூறியதாவது: மிகவும் சவாலான நேரத்தில் நான் உங்களிடம் பேசுகிறேன். நமது நாட்டின் வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இது சிலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல கஷ்டங்களை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கலாம். நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா ஒழிப்பு பணியில் முன்னணியில் பணியாற்றும் தேசிய சுகாதார சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நன்றி. இந்த சவால்களை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்று வரும் ஆண்டுகளில் நாம் பெருமையுடன் பேசுவோம் என நம்புகிறேன். நல்ல நாட்கள் திரும்பும். நாம் மீண்டும் நண்பர்களாக இருப்போம். நமது குடும்பத்துடன் நாம் சேர்ந்திருப்போம். நாம் மீண்டும் சந்திப்போம். இவ்வாறு ராணி பேசினார்.பிரதமர் போரிஸ் ஜான்சன் நலம்:இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில், அவர் லண்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். இதுகுறித்து இங்கிலாந்து அமைச்சர் அளித்த பேட்டியில், ‘‘இது அவசர சிகிச்சைக்கான சேர்க்கை அல்ல. வழக்கமான சோதனைகள் மேற்கொள்வதற்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்’’ என்றார்.

மூலக்கதை