தெலுங்கானாவில் ஊரடங்கு ஜூன் 3 வரை நீட்டிப்பு இல்லை: ஏப்.15-க்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மட்டுமே பரிசீலனை....முதல்வர் அலுவலகம் தகவல்

தினகரன்  தினகரன்
தெலுங்கானாவில் ஊரடங்கு ஜூன் 3 வரை நீட்டிப்பு இல்லை: ஏப்.15க்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மட்டுமே பரிசீலனை....முதல்வர் அலுவலகம் தகவல்

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவு ஜுன் 3-ம் தேதி வரை நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் 2 வாரங்களுக்கு, மட்டுமே நீட்டிக்க பரிசீலனை என முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதையும் கொரோனா தன் கோரப்பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் வைரஸ் தாக்கல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 111-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 868 பேர் பாதிக்கப்பட்டதுடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு ஏப்.14-ம் தேதி முதல் ஜுன் 3 வரை வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியானது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு தெலுங்கானா முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் கூறியது; மேலும் 2 வாரங்களுக்கு, மட்டுமே நீட்டிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ் ஊரடங்கை நீடிக்குமாறு கோரிக்கை மட்டுமே வைத்துள்ளார். பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் சரிகட்டிவிடலாம், ஆனால் மக்களின் உயிரை காப்பாற்றி ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் கொரோனாவால் 321 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 34 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை