கொரோனாவால் இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு: கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழப்பு; பாதிப்பு எண்ணிக்கை 4,281-ஆக உயர்வு...மத்திய சுகாதாரத்துறை

தினகரன்  தினகரன்
கொரோனாவால் இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு: கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழப்பு; பாதிப்பு எண்ணிக்கை 4,281ஆக உயர்வு...மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 -ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 319 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். உலகம் முழுவதையும் கொரோனா தன் கோரப்பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் வைரஸ் தாக்கல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 111-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 868 பேர் பாதிக்கப்பட்டதுடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உள்ளது. நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 20 பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. டெல்லியில் 523 பேர், தெலங்கானாவில் 334 பேர், கேரளாவில் 327பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 704 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவரை இல்லாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகப்பற்ற பாதிப்பில் மகாராஷ்ட்ராமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 4653 நிவாரண முகாம்களில் 4,54,142 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 5,53,025 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கு உணவு வழங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறியதாக 1,410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 7,570 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்த அபராதம் ரூ. 65,43,624 வசூலிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை