டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: உலகம் முழுவதையும் கொரோனா தன் கோரப்பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் வைரஸ் தாக்கல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,281 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள். கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது; டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 421 அரசுப் பள்ளிகளில் ரேஷன் விநியோகிக்கப்படும். ஒவ்வொரு நபருக்கும் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி கிடைக்கும். இதுபோன்ற 10 லட்சம் பேருக்கு ரேஷன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கூடுதல் தானியங்களைக் கேட்டுப் பெறுவோம் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஒரு நாளைக்கு குறைந்தது 1,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பாதிப்பு உள்ளவர்கள் விரைவாக அடையாளம் காணப்படுகின்றனர். டெல்லியில் மொத்தம் கொரோனாவால் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 330 பேர் நிஜாமுதீன் மார்க்கஸில் பங்கேற்றவர்கள். சோதனை கருவிகளைப் பெற்று வருவதாகவும், வைரஸிற்கான சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சோதனை கருவிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கும், மேலும் ஒரு நாளைக்கு சோதனைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை