2 கொரோனா தடுப்பு மருந்துகள் மனிதர்கள் உடலில் செலுத்தி சோதனை செய்ய தயார் நிலையில் உள்ளது : உலக சுகாதார நிறுவனம்

தினகரன்  தினகரன்
2 கொரோனா தடுப்பு மருந்துகள் மனிதர்கள் உடலில் செலுத்தி சோதனை செய்ய தயார் நிலையில் உள்ளது : உலக சுகாதார நிறுவனம்

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க 2 தடுப்பு மருந்துகளை மனிதர்கள் உடலில் செலுத்தி சோதனை செய்ய தயாராக இருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில், வைரஸ் வராமல் தடுக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.இதுவரை அதிகாரப்பூர்வமாக கொரோனாவுக்கு எந்த ஒரு தடுப்பு மருந்தும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மலேரியாவை குணப்படுத்தப் பயன்படும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துக்காண தேவைகளுக்கு அதிகரித்துள்ளது. இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளதால், தடையை நீக்கி மலேரியா மருந்தை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதே சமயம் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியிலும் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அங்குள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள், ‘பிட்கோவேக்’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசி தற்போது எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மனித உடல்களில் செலுத்தி பரிசோதிக்கும் நிலையில், இரண்டு விதமான தடுப்பு மருந்துங்களும் தயார் நிலையில் உள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது தவிர 60 விதமான மருந்துகள், ஆய்வக சோதனைக்கு முந்தைய நிலையில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை