கொரோனாவுக்கு எதிராக வலிமையை உணர்த்த ஒளியில் மிளிர்ந்த இந்தியா: பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று விளக்கேற்றிய நாட்டு மக்கள்

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்கு எதிராக வலிமையை உணர்த்த ஒளியில் மிளிர்ந்த இந்தியா: பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று விளக்கேற்றிய நாட்டு மக்கள்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக, மக்கள் ஒற்றுமையுடன் தீப ஒளியேற்றம் செய்தனர். கொரோனா வைரசுக்கு எதிராக நமது ஒற்றுமையை காட்டும் விதமாக, இன்று இரவு 9 மணிக்கு அனைத்து வீடுகளிலும் ஒளிவிளக்கு ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் மூலம் ஒளியேற்றி வருகின்றனர். கொரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மக்களிடம் நேற்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிரார்த்தனை செய்து இந்திய மக்கள் மட்டுமன்றி வெளிநாடு வாழ் இந்தியர்களும் மின் விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர். * சென்னை போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் ஒளியேற்றினார். * சில இடங்களில் தெருக்களில் கொரோனாவை ஒழிப்போம் என வீதிகளில் ஒன்று கூடி முழக்கமிட்டனர். * சுய ஊரடங்கின் முடிவில் மக்கள் ஒன்று கூடியதைப் போலவே விளக்குகளை ஏற்றுவதற்காக வீதிகளில், மாடிகளில் ஒன்று கூடினர் பொதுமக்கள். * குஜராத்தில்பொதுமக்கள்  கொரோனா கோ கொரோனா என்ற வாசகங்களுடன் விளக்கேற்றினர்.* திண்டுக்கல் நகரில் சில இடங்களில் பட்டாசுகளை வெடித்தனர் பொதுமக்கள்.* லாக்டவுனால் காற்று மாசு இல்லாமல் இருந்த நிலையில் இன்று பட்டாசுகளை வெடித்து காற்றை மாசு ஏற்படுத்தினர் பொதுமக்கள்.* டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தமது இல்லத்தில் ஒளியேற்றினார்.* கொரோனாவுக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒளியேற்றினார்.* இரவு 9 மணிக்கு, நாட்டின் பல இடங்களில் மக்கள் வீடுகளில் மின் விளக்கை அனைத்து விட்டு, விளக்குகளை ஏற்றினர். மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.* ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது இல்லத்தில் ஒளியேற்றினார்.* பிரதமரின் வேண்டுகளை ஏற்று தேனியில் பணியில் இருந்த காவலர்கள் மெழகுவர்த்தியை கையில் ஏந்தி பிடித்து தங்களின் பங்களிப்பை காட்டினார்கள்.* பிரதமரின் வேண்டுகளை அடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் விளக்கேற்றினர்.* தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பிரதமரின் அழைப்பை ஏற்று அகல்விளக்கு ஏற்றினார்.* புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது வீடு முன் விளகேற்றினார்.* மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் விளக்கேற்றினர்.* பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தனது இல்லத்தின் முன் டார்ச் லைட் அடித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

மூலக்கதை