ஊர்வலங்கள், பொது வழிபாடுகள் ரத்து: வரலாற்றில் முதல் முறை வாடிகனில் மக்கள் கூட்டமின்றி நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பண்டிகை

தினகரன்  தினகரன்
ஊர்வலங்கள், பொது வழிபாடுகள் ரத்து: வரலாற்றில் முதல் முறை வாடிகனில் மக்கள் கூட்டமின்றி நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பண்டிகை

வாடிகன்: வரலாற்றில் முதல் முறையாக வாடிகனில் மக்கள் கூட்டமின்றி நேற்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் கடைசி வாரத்தின் முதல் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். குருத்தோலையை பிடித்தபடி கிறிஸ்தவர்கள் பாடல் பாடிக்கொண்டு ஊர்வலமாக செல்வதும், பின்னர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் வழக்கமகிறித்தவம் பரவியிருக்கின்ற எல்லா நாடுகளிலும் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் சில சிறப்புப் பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். ஒலைகளைத் தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள்வார்கள். சிலர் குருவி, புறா, கிலுக்கு, மணிக்கூண்டு போன்று விதவிதமான வடிவங்களில் ஓலைகளைக் கீறிப் பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக, சிறுவர்கள் இதில் உற்சாகத்தோடு கலந்துகொள்வார்கள்.உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து விதமான மத வழிபாடுகளுக்கு தற்போது தடை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால், வாடிகன் நகரத்தில் நிபந்தனைகளுடன் வழிபாடு நடத்தப்பட்டது. அதில் போப் பிரான்சிஸ் வழிபாடு நடத்த, ஏராளமான மக்கள் இணையத்தின் வாயிலாக இணைந்து வழிபாடு நடத்தினர். இது வரலாற்றின் முதன் முறை என்று வடிகன் சபை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில், தற்போது அரசின் உத்தரவை ஏற்று, குருத்தோலை ஊர்வலங்கள் மற்றும் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிலிருந்தே வழிபட வேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மூலக்கதை