ஆந்திராவில் பாதிப்பு 226 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் பாதிப்பு 226 ஆக உயர்வு

திருப்பதி: ஆந்திராவில் கொரோனா வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. வைரசின் தாக்கம் வேகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஆந்திராவில் நேற்றைய நிலவரப்படி 226 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  உள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா வைரசுக்கு  ஒருவர் பலியாகி உள்ளார். அதிகபட்சமாக கிருஷ்ணா மாவட்டத்தில் 28 பேரும், அனந்தப்பூர் மாவட்டத்தில் 3, சித்தூரில் 17, கிழக்கு கோதாவரியில் 11, குண்டூரில் 30, கர்னூலில் 27, கடப்பாவில் 23 , பிரகாசம் மாவட்டத்தில் 23, விசாகப்பட்டினத்தில் 15, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 15, நெல்லூரில் 34 உட்பட மொத்தம் 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மேற்கண்ட பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு பொதுமக்கள் வெளியே வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நகராட்சி சார்பில் வீட்டிற்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஆந்திராவில் இதற்கு முன்பு குறைந்தளவு நபர்களே கொரோனா தொற்றால் பாதித்திருந்தனர். தற்போது டெல்லி நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 226 பேர் வைரஸ் தொற்றில் பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை