உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.14 லட்சமானது

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.14 லட்சமானது

புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12.14 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆகியுள்ளது. இதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 14 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது. எனினும், உலகம் முழுவதும், 2.53 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கையில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 3 லட்சத்து 11 ஆயிரத்து 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக  ஸ்பெயினில் 1,30,759 பேரும், இத்தாலியில் 1,24,632 பேரும், ஜெர்மனியில் 96,092 ேபரும், பிரான்சில் 89,953 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு 15,362 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் 12,418 பேருடன்  ஸ்பெயின் உள்ளது. அமெரிக்காவில் 8,454 இறந்துள்ளனர். பிரான்சில் 7,560 பேரும், இங்கிலாந்தில் 4,313 பேரும், ஈரான் 3,603 பேரும் உயிரிழந்துள்ளனர். ெகாரோனா முதலில் தோன்றிய, சீனாவில் 81,669 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  பலி எண்ணிக்கை 3,329.

மூலக்கதை