புளிச்... புளிச்சுன்னு துப்பினா உங்களைத்தான் பளிச்சுன்னு தாக்கும்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
புளிச்... புளிச்சுன்னு துப்பினா உங்களைத்தான் பளிச்சுன்னு தாக்கும்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை

புதுடெல்லி: பொது இடங்களில் புகையிலையை உட்கொண்டு எச்சிலை துப்பக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா, பான் மற்றும் பிற மெல்லும் புகையிலை பொருட்கள், அர்கா நட் ஆகியவற்றை சாப்பிட்டால் உமிழ்நீர் உற்பத்தி அதிகமாகும். அதனை உட்கொள்ளும் சிலர், தொடர்ந்து பொது இடங்களில் துப்பி வருகின்றனர். ஆனால், அவ்வாறு புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி துப்ப வேண்டாம் என்று, உலக சுகாதார ஆராய்ச்சி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் துப்புவதால் கொரோனா வைரஸ் பரவுவதை அதிகரிக்கும். தொற்றுநோயின் பரவல் அதிகரித்து வரும் ஆபத்தை கருத்தில் கொண்டு, புகைபிடிக்காத புகையிலை பொருட்களை உட்கொள்வதையும் பொது இடங்களில் துப்புவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களை மென்று துப்புபவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், வைரஸ் பாதித்த மற்றவர்கள் இதேபோன்று துப்பும்போது, வைரஸ் இல்லாதவர்களையும் அது பாதிக்கும். இதனால் அவர் வைரசை வீட்டுக்கு கொண்டு சென்று குடும்பத்தினருக்கும் பரவ வாய்ப்பு அளிப்பவராக மாறிவிடுவார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

மூலக்கதை