பிறந்தநாள்... இன்று பிறந்தநாள் மக்களை கூட்டி... மகிழும் நாள்: சர்ச்சையில் சிக்கிய பாஜ எம்எல்ஏ

தினகரன்  தினகரன்
பிறந்தநாள்... இன்று பிறந்தநாள் மக்களை கூட்டி... மகிழும் நாள்: சர்ச்சையில் சிக்கிய பாஜ எம்எல்ஏ

வார்த்தா: தன்னுடைய பிறந்த நாளுக்காக மக்களை கூட்டி இலவச ரேஷன் பொருட்களை கொடுத்த பாஜ எம்எல்ஏ மீது பேரிடர் நோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், வார்தா மாவட்டத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ தாதாராவ் கெசே. இவருக்கு நேற்று பிறந்தநாள். இதனால் பொதுமக்களை தன்னுடைய வீட்டின் முன்பு கூடச் செய்து, அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கி உள்ளார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர்.மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், இதை மதிக்காததுடன், 100க்கும் மேற்பட்டவர்களை ஒரே இடத்தில் கூடவும் செய்துள்ளார் எம்எல்ஏ தாதாராவ். இநத கூட்டம் தொடர்பான செய்திகள் உண்மைதான் என்று துணைக் கலெக்டர் அளவிலான அதிகாரி ஹரீஷ் தர்மிக் உறுதிப்படுத்தி உள்ளார். இதையடுத்து அவர் மீது பேரிடர் நோய் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை எம்எல்ஏ தாதாராவ் மறுத்துள்ளார். இது திட்டமிட்ட அரசியல் சதி என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை