படிவம் 15ஜி, 15எச் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
படிவம் 15ஜி, 15எச் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: தனிநபர்கள் 15ஜி மற்றும் 15எச் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  பிஎப் வரி பிடித்தம் செய்ய தொடங்கி 5 ஆண்டுக்குள் அதில் இருந்து பணத்தை எடுப்பது, கார்ப்பொரேட் பத்திரங்கள் மூலம் வருவாய் 5,000க்கு மேல் இருப்பது மற்றும் வங்கி, அஞ்சலக டெபாசிட்கள், வாடகை வருவாய், இன்சூரன்ஸ் கமிஷன் போன்றவற்றுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். வரி உச்சவரம்புக்கு கீழ் ஆண்டு வருவாய் உள்ள தனிநபர்கள் மேற்கண்ட வருவாய் குறிப்பிட்ட வரம்புக்கு மேல் செல்லும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதை தவிர்க்க 15ஜி படிவத்தையும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருந்தால் 15எச் படிவத்தையும் நிதியாண்டு துவக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.கொேரானா பாதிப்பை கருத்தில் கொண்டு 15ஜி மற்றும் 15 எச் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கெடுவை மத்திய நேரடி வரிகள் ஆணையம் நீட்டித்துள்ளது. இதன்படி மேற்கண்ட படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய தனிநபர்கள், கடந்த 2019-20 நிதியாண்டில் சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது பிற நிறுவனங்களிடம் சமர்ப்பித்திருந்தால், அவை வரும் ஜூன் 30ம் தேதிவரை செல்லத்தக்கதாக கருதப்படும்.

மூலக்கதை