தீவிரமடையும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் 65,000-ஐ கடந்தது பலி...200 நாடுகளை சேர்ந்த 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தினகரன்  தினகரன்
தீவிரமடையும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் 65,000ஐ கடந்தது பலி...200 நாடுகளை சேர்ந்த 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வூகான்: உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65,000ஐ கடந்தது; இதுவரை 65,449 பேர் பலி ஆகியுள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 12,10,421 பேர் பாதிக்கப்பட்டு 2,51,822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மேலும் பாதிப்பில் 44,131 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கண்டு வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர். மேலும் தங்கள் நாட்டு மக்களை எல்லாம் கொரோனாவிற்கு பலி கொடுத்து வருகின்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு  உலகளவில் லட்சக்கணக்கில் உயர்ந்து உலக சுகாதார நிறுவனத்திற்கே கடும் சவால் விடும் வகையில் பரவி வருகிறது. இதனிடையே உலக அளவில் கொரோனா பரவுவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட மிக மோசமான சூழல் உருவாகும் என்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அந்த வகையில், இத்தாலிஇத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15,362-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலி நாட்டில் 681-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 124,632 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 20,996 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.ஸ்பெயின்ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,418 -ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்து 2-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 471-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.அமெரிக்கா - 8,454பிரான்ஸ்பிரான்ஸில் சனிக்கிழமை மட்டும் கொரோனா வைரஸுக்கு 441 பேர் பலியாகினர். இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,560 - ஆக அதிகரித்துள்ளது. இதில் 5,532 பேர் மருத்துவமனைகளில் பலியாகி உள்ளனர். 2,028 பேர் முதியோர் முகாம்களில் மரணமடைந்துள்ளனர்.பிரான்ஸில் 28,143 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,000- க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.இந்தியாநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3374-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 472 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேரும், தமிழகத்தில் 485 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை