காஷ்மீரின் குப்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : கடந்த 24 மணி நேரத்தில் 9 தீவிரவாதிகள் பலி

தினகரன்  தினகரன்
காஷ்மீரின் குப்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : கடந்த 24 மணி நேரத்தில் 9 தீவிரவாதிகள் பலி

காஷ்மீர்: கடந்த 24 மணி நேரத்தில் 9 தீவிரவாதிகள் இந்திய பாதுகாப்புபடைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்மந்த் குரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்  துறையினர் தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் நேற்று காலை பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது. தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்த போது  மறைந்திருந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், சமீபத்தில் பொதுமக்கள் 3 பேரை கொன்ற 3 பேர் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்   கொல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாககுதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றவர்களை இந்திய  பாதுகாப்புபடை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் இந்திர ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்துள்ளார். மேலும், 2 இராணுவ வீரர்கள் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு  வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை