கொரோனாவை எதிர்த்துப் போராட இந்தியா-அமெரிக்க கூட்டுறவின் முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டோம்: தொலைபேசி உரையாடளுக்கு பின் பிரதமர் மோடி ட்விட்

தினகரன்  தினகரன்
கொரோனாவை எதிர்த்துப் போராட இந்தியாஅமெரிக்க கூட்டுறவின் முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டோம்: தொலைபேசி உரையாடளுக்கு பின் பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் நடத்தினார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 59,000-ஐ தாண்டிய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் உலகளவில் சுமார் 200  நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் \'அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன், ஒரு விரிவான தொலைபேசி உரையாடல் மேற்கொண்டேன், நாங்கள் ஒரு நல்ல கலந்துரையாடலை மேற்கொண்டோம், மேலும் கொரோனாவை எதிர்த்துப் போராட இந்தியா-அமெரிக்க கூட்டுறவின் முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டோம்\' இவ்வாறு, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் மட்டும், அமெரிக்கா 1,169 கொரோனா இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது எந்த ஒரு நாட்டிலும் ஒரே நாளில் பதிவான எண்ணிக்கையை விட மிக அதிகமானது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் இரண்டு வாரங்கள் மிக, மிக வேதனையானது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த வைரஸ் முக்கியமாக வயதானவர்களையும், நீண்டகாலமாக உடல்நிலை பிரச்சினை இருந்தவர்களையும் அதிகம் தாக்கியது.

மூலக்கதை