ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது....மும்பை தாராவியில் 5 பேருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது....மும்பை தாராவியில் 5 பேருக்கு கொரோனா

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் 3072 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 213 பேர் குணமடைந்தனர். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 59,000ஐ தாண்டிய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் உலகளவில் சுமார் 200  நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் 3072 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 213 பேர் குணமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மும்பை தாராவியில் 5 பேருக்கு கொரோனா மகாராஷ்டிராவில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்மாநிலத்தின் தாராவி பகுதியை சேர்ந்த ஆண், பெண் ஒருவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மும்பை தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை