ஜம்மு, கர்நாடகாவில் லேசான நில நடுக்கம்

தினகரன்  தினகரன்
ஜம்மு, கர்நாடகாவில் லேசான நில நடுக்கம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்முவின் பல்வேறு பகுதியில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே, கொரோனா முடக்கம் காரணமாக வீடுகளில் பீதியுடன் முடங்கியுள்ள மக்களுக்கு, இந்த நிலநடுக்கம் கூடுதல் பீதியை அளித்தது. சில இடங்களில் வீடுகள் குலுங்கின. இருப்பினும், எந்த சேதமும் ஏற்படவில்லை. இதேபோல், கர்நாடகாவிலும் சில இடங்களில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. மைசூரு, குடகு, ஹாசன் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம்  மாலை 5.18-க்கு ரிக்டேர் அளவுகோளில் 2.6 புள்ளிகள் என்ற அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் சில வீடுகள் இடிந்து நாசமானது. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் பாதுகாப்பாக நின்றனர். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பிறகு, அவர்களை பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

மூலக்கதை