பிரான்சில் வெறித்தனம் கேக் வாங்க நின்ற மக்களை கத்தியால் குத்திய வாலிபர்: 2 பேர் பரிதாப பலி

தினகரன்  தினகரன்
பிரான்சில் வெறித்தனம் கேக் வாங்க நின்ற மக்களை கத்தியால் குத்திய வாலிபர்: 2 பேர் பரிதாப பலி

கொரோனாவுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாரீஸ் நகரின் ரோமன்ஸ் சர் இசரே பகுதியில் உள்ள பேக்கரியில் கேக் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இளைஞன் ஒருவன் தான் வைத்திருந்த கத்தியால் வரிசையில் நின்றிருந்தவர்களை திடீரென சரமாரியாக குத்தினான். இதில் இருவர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர்.இதைத் தொடர்ந்து கத்திக்குத்து நடத்தியவனை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இவன் சூடானை சேர்ந்தவன் என்றும்  அவனிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. கத்தியால் குத்தும் போது அவன் மத சம்பந்தப்பட்ட கோஷத்தை போட்டதால்,  இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடுமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

மூலக்கதை