சீனாவில் நாடு முழுவதும் 3 நிமிட மவுன அஞ்சலி

தினகரன்  தினகரன்
சீனாவில் நாடு முழுவதும் 3 நிமிட மவுன அஞ்சலி

சீனாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3,300க்கும் மேற்பட்டோருக்கு  அந்நாட்டு அரசு சார்பில் நேற்று காலை 10 மணிக்கு 3 நிமிட மவுன அஞ்சலி  செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்  பங்கேற்றார். அப்போது விமானம், கார்களில் இருந்து ஒலி எழுப்பி அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.  கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து முதன் முதலாக உலகிற்கு  தெரியப்படுத்திய மருத்துவர் லீ வென்லியாங்க் உட்பட, கொரோனாவுக்கு பலியான அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. வுகானில் மவுன அஞ்சலி செலுத்திய போது மக்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.  சீனாவில் மட்டுமின்றி, பிற நாடுகளில் உள்ள சீன தூதரகங்களிலும்  தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. கடந்த வியாழக்கிழமை  நிலவரப்படி, சீனாவில் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்ட 46 மருத்துவ பணியாளர்கள், காவல் துறையை சேர்ந்த 95 பேர், இந்நோயால் இறந்துள்ளனர்.

மூலக்கதை