மிசோரமில் ஊருக்குள் புகுந்து 10 மாடுகளை கொன்ற ஓநாய்கள்

தினகரன்  தினகரன்
மிசோரமில் ஊருக்குள் புகுந்து 10 மாடுகளை கொன்ற ஓநாய்கள்

ஐசாவால்:  மிசோரம் மாநிலம், செர்சிப் மாவட்டத்தில் உள்ள கிராமம் சைலுலாக். இந்தியா- மியான்மர் எல்லையில் உள்ள இந்த கிராமத்திற்கு வெளியே 8 கிமீ தொலைவில் உள்ள பண்ணைகளில் 200க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள் வளர்த்து வந்தனர். ஊரடங்கு காரணமாக அவர்கள் பண்ணைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மாடுகள் கவனிப்பாரற்று கட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஓநாய்கள் கூட்டம் அங்கு வந்து 10 மாடுகளை அடித்து ெகான்று இரையாக்கின. வங்கியில் கடன் பெற்று இவற்றை  வாங்கி   வளர்த்து வந்த நிலையில், ஓநாய்கள் கொன்றதால் மக்கள் கவலை அடைந்தனர்.

மூலக்கதை