கர்நாடகாவில் 144 பேர் பாதிப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் 144 பேர் பாதிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோரின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 128ஆக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 16 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 144ஆக  உயர்ந்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில் 3 மற்றும் பாகல்கோட்டை  மாவட்டத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் டெல்லி நிகழ்ச்சியில்  பங்கேற்ற மூன்று பேர் அடங்குவர்.   கொரோனா தொற்று தாக்கி பாகல்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒருவர்  உயிரிழந்ததின் மூலம் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் கொரோனா  வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது குறித்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா  ஆலோசனை நடத்தினார்.

மூலக்கதை