டோனியுடன் விளையாட பிடிக்கும்...

தினகரன்  தினகரன்
டோனியுடன் விளையாட பிடிக்கும்...

சமூக ஊடகத்தின் மூலம்  இங்கிலாந்து  வீரர் கெவின் பீட்டர்சன் நேற்று கோஹ்லியுடன் கலந்துரையாடினார். அப்போது பீட்டர்சன், ‘யாருடன் உங்களுக்கு பேட்டிங் செய்ய பிடிக்கும்?’ என்று கேட்டார். அதற்கு கோஹ்லி, ‘பந்தை விரட்டியதும் யார் என்னுடைய அழைப்பை சட்டென்று புரிந்துக் கொண்டு வேகமாக ரன் எடுக்க ஓடி வருகிறார்களோ அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் பார்த்தால் அது டோனிதான். எனக்கு அவருடன் பேட்டிங் செய்ய பிடிக்கும். இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்தபோது அணிக்காக சி றப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்’ என்று கூறியுள்ளார். கூடவே, ‘டோனிக்கு பிறகு, பெங்களூர் அணியில் சக வீரரான தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டி வில்லியர்சுடன் பேட்டிங் செய்வதும் பிடித்தமான விஷயம்’ என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை