காஷ்மீரில் வேட்டை 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் வேட்டை 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாககுதலில்  4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில்  குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்மந்த் குரி கிராமத்தில் தீவிரவாதிகள்  நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையினர் தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் நேற்று  காலை பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது. தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்த  போது மறைந்திருந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  இதற்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், சமீபத்தில் பொதுமக்கள் 3 பேரை கொன்ற 3 பேர் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்  கொல்லப்பட்டனர்.

மூலக்கதை