எனது சிறந்த கேப்டன் தோனி * சொல்கிறார் முன்னாள் பயிற்சியாளர் | ஏப்ரல் 04, 2020

தினமலர்  தினமலர்
எனது சிறந்த கேப்டன் தோனி * சொல்கிறார் முன்னாள் பயிற்சியாளர் | ஏப்ரல் 04, 2020

 புதுடில்லி: ‛‛எனது சிறந்த கேப்டன் தோனி தான். ஐ.பி.எல்., அணிகளில் சென்னை ‛கிங்ஸ்’ தான் எப்போதும் சூப்பர்,’’ என முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ‛ஆல் ரவுண்டர்’ டாம் மூடி 54. ஓய்வுக்குப் பின் இலங்கை அணி பயிற்சியாளராக இருந்தார். ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப், ஐதராபாத் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தார். அடுத்து வர்ணனையாளர் ஆனார். இவர் கூறியது:

‛டுவென்டி-20’ கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்தியாவின் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தான் ‛பெஸ்ட்’ துவக்க ஜோடியாக உள்ளனர். தற்போதுள்ள இந்திய அணி வீரர்களில் சுப்மன் கில், வளர்ந்து வரும் சிறந்த இளம் வீரராக திகழ்கிறார். அதேநேரம் கேப்டன் கோஹ்லி தான் எனக்குப் பிடித்த சிறந்த கிரிக்கெட் வீரர். சுழல் ‛ஆல் ரவுண்டர்’ ஜடேஜா சிறந்த இந்திய ‛பீல்டராக’ உள்ளார்.

நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சனுக்கு அசத்தலான கிரிக்கெட் அறிவு உள்ளது. ஐ.பி.எல்., தொடரை பொறுத்தவரையில் சென்னை  ‛கிங்ஸ்’ தான் எப்போதும் சூப்பர்  அணியாக உள்ளது. ‛சீனியர்’ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி தான்  என்னைப் பொறுத்தவரையில் சிறப்பான கேப்டன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை