சச்சினின் மறக்க முடியாத ‛241’ * லாராவின் மலரும் நினைவுகள் | ஏப்ரல் 04, 2020

தினமலர்  தினமலர்
சச்சினின் மறக்க முடியாத ‛241’ * லாராவின் மலரும் நினைவுகள் | ஏப்ரல் 04, 2020

புதுடில்லி: ‛‛ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்டில் சச்சின் எடுத்த 241 ரன்கள், மிகவும் சிறப்பான இன்னிங்ஸ்,’’ என விண்டீசின் பிரையன் லாரா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ‛ஜாம்பவான்’ சச்சின் 46. தனது 16 வயதில் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனவர். 200 டெஸ்டில் 15,921 ரன்கள் (51 சதம்), 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்கள் (49 சதம்) விளாசிய சச்சின், ‛சதத்தில்’ சதம் அடித்தவர். தவிர 164 அரைசதங்கள் விளாசினார்.

இவர் குறித்து விண்டீஸ் அணியின் பேட்டிங் மாஸ்டர் ஓய்வு பெற்ற பிரையன் லாரா 50, கூறியது:

சச்சின் 16 வயதில் டெஸ்ட் அரங்கில் கால்பதித்தார். தொடர்ந்து 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகின் நீடித்தார். நினைத்துப் பார்த்தாலே வியக்க வைக்கிறது. இதை நம்பவே முடியவில்லை. தனது கிரிக்கெட் காலம் முழுவதும் பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேநேரம் ஆஸ்திரேலிய மண்ணில் சிட்னி  டெஸ்டில் (2004)  இவர் வெளிப்படுத்திய இந்த ஆட்டம் என்றும் மறக்க முடியாதது. 

இத்தொடரில் ‛பார்ம்’ இல்லாமல் தவித்த சச்சின், முதல் இன்னிங்சில் 241 ரன்கள் குவித்தது மிகவும் அசத்தலானது. இப்போட்டி ‛டிரா’ ஆனாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சச்சின் விளையாடியது மிகவும் சிறப்பான இன்னிங்சாக அமைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை