நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதலை மிஞ்சிய கொடூரம் : இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் கொரோனாவால் உயிரிழக்கும் அவலம்

தினகரன்  தினகரன்
நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதலை மிஞ்சிய கொடூரம் : இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் கொரோனாவால் உயிரிழக்கும் அவலம்

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில், ஒரே நாளில் இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் 562 பேர் உயிரிழந்திருப்பதாக, அம்மாநில ஆளுநர் Andrew Cuomo தெரிவித்துள்ளார்.கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,480 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 7,402 ஆக அதிகரித்தது. அமெரிக்காவில் 277,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 12,283 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 257,790 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5,787 பேர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்இந்நிலையில் அமெரிக்காவில் அதிகபட்சமாக நியூயார்க் மாநிலத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு இதுவரை 3 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையே 24 மணி நேரத்தில் 562 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் உயிரிழந்திருப்பதாக நியூயார்க் ஆளுநர் Andrew Cuomo தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதலை மிஞ்சிய கொடூரம் தற்போது அரங்கேறி வருகிறது, இதற்கடுத்தபடியாக, நியூஜெர்சி, மிச்சிகன், கலிஃபோர்னியா, மசாசூசெட்ஸ், லூசியானா, ஃபுளோரிடா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

மூலக்கதை