இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளில் சுமார் 30% பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான்: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளில் சுமார் 30% பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான்: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில், 58 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்து உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 59,000ஐ தாண்டிய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் உலகளவில் சுமார் 200  நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது; கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அறுபத்தெட்டு பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 183 பேர் குணமாகியுள்ளனர். நாட்டின் மொத்த பாதிப்புகளில் சுமார் 30% டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான். சுமார் 22,000 டேபிளகி ஜமாஅத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 42% பேர் 21-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.ஒன்பது சதவீதம் நோயாளிகள் 0-20 வயதுக்கு உட்பட்டவர்கள். 33 சதவீதம் பேர் 41-60 வயதுக்கு இடைப்பட்ட நோயாளிகள். 17 சதவீத நோயாளிகள் 60 வயதைத் தாண்டியவர்கள்.

மூலக்கதை