காய்கறி கொடுத்து வைரஸ் தொற்று பண்டமாற்று! கேரளாவிடம் வாங்கி வரும் அபாயம்

தினமலர்  தினமலர்
காய்கறி கொடுத்து வைரஸ் தொற்று பண்டமாற்று! கேரளாவிடம் வாங்கி வரும் அபாயம்

போத்தனூர்;தமிழக -- கேரளா எல்லையான வாளையார் வழியே, சரக்கு வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. அங்கு சென்று வரும் வாகன ஓட்டுனர்களால், கோவையில் கொரோனா வைரஸ் தொற்று, அதிகளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பழம், மளிகை கடைகள், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சரக்கு வாகனங்களை தவிர, இதர போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டன.
இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி தரப்பட்டது. அனைத்து விதமான சரக்கு வாகனங்களும், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல துவங்கியுள்ளன.கேரளாவுக்கு நமது மாநிலத்திலிருந்து குறிப்பாக, கோவை மாவட்டத்திலிருந்து காய்கறி, பூக்கள், கோழி முட்டை போன்றவை, அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வகையில், தினமும் சுமார் ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. கேரளாவுக்குள் நுழையுமிடத்தில், 'இண்டியன் ரிசர்வ் பட்டாலியன்' வீரர்கள் கண்காணித்து, விபரங்களை கேட்கின்றனர்.கோவை மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களில், உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சுகாதார துறையினர் பரிசோதிக்கின்றனர். பின் தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றனர்.
தற்போது மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்று அதிகமாகவுள்ள கேரளாவுக்கு சென்று, திரும்பும் வாகன ஓட்டிகள் மற்றும் அங்கு பழகியவர்களுக்கு, தொற்று உள்ளதா என தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
டிரைவர்களுக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் 15 நாட்களுக்கு பின்னரே தெரிய வரும். அப்போதுதான் சிகிச்சை துவங்கும். அதற்குள்ளாக அவர் பல இடங்களுக்கு சென்றிருப்பார்; பலருடன் பழகி விடுவார். அவ்வகையில், சமுதாய தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதனை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.டிரைவர்களுக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் 15 நாட்களுக்கு பின்னரே தெரிய வரும். அப்போதுதான் சிகிச்சை துவங்கும். அதற்குள்ளாக அவர் பல இடங்களுக்கு சென்றிருப்பார்; பலருடன் பழகி விடுவார். அவ்வகையில், சமுதாய தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பாதுகாப்பு இல்லை
தினமும் இரவு, 7:00 மணிக்கு மேல் கேரளாவுக்கு செல்லும் வாகனங்களால், வாளையாரில் போக்குவரத்து நெரிசலே ஏற்படுகிறது. சில நேரங்களில், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகளை தவிர, மற்றவர்களுக்கு முக கவசம், கையுறை, சானிட்டைசர் போன்றவை வழங்கப்படுவதில்லை.

மூலக்கதை