வளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும்: ஆசிய வங்கி எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
வளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும்: ஆசிய வங்கி எச்சரிக்கை

கொரோனா வைரசால் உலக பொருளாதார ரூ.310 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும் என்றும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற முக்கிய வளர்ந்த நாடுகள் கடுமையான அழிவை சந்திக்கும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி எச்சரித்துள்ளது.  கொரோனா வைரஸ் இன்னும் எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்பதை கணிக்க முடியாத நிலையில், தற்போதைய சூழலில் 2021ம் ஆண்டுதான் பொருளாதார சகஜ நிலைக்கு திரும்பும் என ஆசிய வங்கி கணித்துள்ளது. மேலும், குறுகிய காலத்தில் வைரசை கட்டுப்படுத்தினால் மட்டுமே, ரூ.150 லட்சம் கோடி இழப்போடு உலக பொருளாதாரம் தப்பிக்க முடியும் என்றும் அது எச்சரித்துள்ளது. இதனிடையே, கடந்த 2 வாரத்தில் அமெரிக்காவில் 1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். ஐரோப்பாவிலும் கடந்த சில வாரங்களில் 1 கோடி வரை வேலை இழந்து தவிக்கின்றனர். ஸ்பெயினில் மார்ச் மாதத்தில் மட்டும் 3 லட்சம் பேர் வரை வேலை இழந்துள்ளனர்.

மூலக்கதை