நெருங்கினால் தான் ஆபத்து காற்றில் பரவாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

தினகரன்  தினகரன்
நெருங்கினால் தான் ஆபத்து காற்றில் பரவாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

கொரோனா வைரஸ் சுவாச நீர்த்துளிகள் மற்றும் நெருங்கிய தொடர்புகள் மூலமாகவே பரவும், அது காற்றில் அதிக நேரம் இருக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் வெளியீட்டில் கூறப்பட்டுள்ளதாவது: n கொரோனா வைரஸ் வெவ்வேறு அளவிலான நீர்த்துளிகள் மூலமாக பரவும். இருமல் மற்றும் தும்மல் போன்ற சுவாச அறிகுறிகள் கொண்ட ஒரு நபருடன் நீங்கள் ஒரு மீட்டர் தூரத்திற்குள் நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது வைரஸ் தொற்றுள்ள நீர்த்துளிகள் மூலமாக கொரோனா பரவுதல் ஏற்படுகிறது. பொதுவாக, 5-10 மைக்ரான் அளவு கொண்ட தொற்றுநோய் நீர்த்துளிகள் உங்கள் உடலுக்குள் பரவக்கூடும். பாதிக்கப்பட்ட நபரை சுற்றியுள்ள மேற்பரப்புகள் மற்றும் பொருட்களை தொடுவதன் மூலம் வைரஸ் பரவக்கூடும். ஒவ்வொரு பொருட்களை பொறுத்து, அதில் படிந்திருக்கும் வைரஸ் நீர்த்துளிகளின் உயிர்ப்புடன் இருக்கும் நேரம் மாறுபடும். காற்று வழி பரவுதல் நீர்த்துளி பரவுதலில் இருந்து வேறுபட்டது. 5 மைக்ரானுக்கும் குறைவான விட்டம் கொண்ட சிறிய துகள்கள் மட்டுமே காற்றில் பயணிக்கும். அது நுண்ணுயிரிகளின் இருப்பை குறைக்கிறது. அவை நீண்ட நேரமாக காற்றில் இருக்கும், ஒரு மீட்டர் தூரத்துக்கும் அதிகமான நபர்களையும் சென்றடையும். ஆனாலும், சீனாவில் காற்று வழி பரவல் ஒரு நபருக்கு கூட ஏற்பட்டதில்லை. அதே சமயம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் அவர்கள் தேவையான நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் இருப்பது அவசியம். இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.ஐநா தீர்மானம் நிறைவேறியது:பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் கடுமையான இடையூறு ஏற்படுத்தும் கொடிய நோயான கொரோனா வைரசை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்பை தீவிரப்படுத்த வேண்டுமென ஐநா பொதுச் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா உள்ளிட்ட 188 உறுப்பு நாடுகளும் சம்மதித்துள்ளன. கொரோனா தொடர்பாக ஐநா நிறைவேற்றும் முதல் தீர்மானம் இது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையிலும், இவ்விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா பாதிப்பு 10 லட்சம் தாண்டியது:உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. நேற்றைய நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 34 ஆயிரமாக உள்ளது. 54,369 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கையில் இத்தாலி 13,915 எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 932 பேர் இறந்தனர். அங்கு பலி எண்ணிக்கை 10,935 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா 6,098, பிரான்சில் 5,387, ஈரானில் 3,294 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவில் இன்று துக்க தினம்:சீனாவில் கொரோனா வைரஸ் 3,300 பேரை பலி கொண்டது. இந்நோயால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சீனா முழுவதும் இன்று துக்க தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதில், கொரோனா குறித்து முதல் முறையாக தகவல் தெரிவித்து, அந்நோய்க்கு எதிராக போராடி தனது உயிரையும் இழந்த டாக்டர் லீ வென்லியாங்குக்கும் (வயது 34) சீன மக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையொட்டி, இன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட உள்ளது. காலை 10 மணிக்கு மக்கள் அனைவரும் 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த சீன மாகாண கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

மூலக்கதை